ADDED : அக் 31, 2025 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், கிச்சிப்பாளையம், ராஜாபிள்ளை காடு, கடம்பூர் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 28. கடந்த, 6ல் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த பிரபு என்பவரை முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தினார்.
அவர் புகாரில், கிச்சிப்பாளையம் போலீசார் தமிழ்செல்வனை கைது செய்தனர். அவர் மீது, 2023, 2024ம் ஆண்டுகளில் அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.இதனால் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க, போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவுப்படி, நேற்று தமிழ்செல்வன் மீது குண்டாஸ் பாய்ந்தது.

