ADDED : அக் 10, 2024 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
2 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்
சேலம், அக். 10-
வாழப்பாடி அடுத்த அத்தனுார்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன், 52. அயோத்தியாப்பட்டணம் அடுத்த குள்ளம்பட்டி, காட்டூரை சேர்ந்தவர் அன்பழகன், 42. இருவரும் கூட்டாளிகளுடன் சேர்ந்து, கடந்த பிப்., 13ல் ஆத்துக்காடு வளையக்காரனுாரை சேர்ந்த தொழிலதிபரை தனி இடத்துக்கு அழைத்து சென்று ஒரு கொலை வழக்கு தொடர்பான நீதிமன்ற செலவுக்கு, 16 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினர். பின் அவரது பாக்கெட்டில் இருந்த, 10,000 ரூபாயை அபகரித்துக்கொண்டு தப்பினர். புகார்படி வீராணம் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டதால் மாநகர் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபுனபு உத்தரவுப்படி, குண்டர் சட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டனர். பின் இருவரும் சிறையில் ஓராண்டுக்கு அடைக்கப்பட்டனர்.

