ADDED : அக் 17, 2026 04:08 AM
தலைவாசல்: தலைவாசல், சார்வாயை சேர்ந்தவர் மணிகண்டன், 45. நெல் அறுவடை இயந்திரம் வைத்து தொழில் செய்கிறார். கடந்த, 2 அதிகாலை, 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான அவரது அறுவடை இயந்திரம், மினி லாரி திருடுபோனது.
அவர் புகார்படி, தலைவாசல் போலீசார் விசாரித்ததில், மாதா கோவில் தெருவை சேர்ந்த ஜோதிபாசு, 36, பிரபு, 35, இளையராஜா 32, ஆகியோர் திருடியது தெரிந்தது.நேற்று ஆறகளூரில் நிறுத்தியிருந்த அறுவடை இயந்திரம், மினி லாரியை, போலீசார் மீட்டனர். பின் ஜோதி பாசுவை கைது செய்து, பிரபு, இளைய ராஜாவை தேடுகின்றனர்.
போலீசார் கூறுகையில், 'கடந்த செப்., 20ல், முன்விரோத பிரச்னையில் மணிகண்டனை, ஜோதிபாசு, அவரது தந்தை சரவணன், துரைராஜ் ஆகியோர், வீடு புகுந்து இரும்பு கம்பியால் தாக்கினர். இதுதொடர்பாக ஜோதிபாசு உள்பட, 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது' என்றனர்.
