/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பேனர் அகற்றப்பட்டுள்ளதா? கண்காணிக்க அறிவுரை
/
பேனர் அகற்றப்பட்டுள்ளதா? கண்காணிக்க அறிவுரை
ADDED : மார் 18, 2024 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: ஓமலுார் தாசில்தார் அலுவலகத்தில் ஓமலுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ.,க்களுக்கு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
ஓமலுார் கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிக்குமார் தலைமை வகித்தார். அதில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பொது இடங்கள், தனியார் இடங்களில் உள்ள கட்சிக் கொடிக்கம்பங்கள், அரசியல் கட்சி பேனர்கள் முறையாக அகற்றப்பட்டுள்ளதா, கட்சி பொதுக்கூட்டங்கள், பிரசாரங்கள், பரிசு பொருட்கள் வழங்குகிறார்களா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

