/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சுகாதார செவிலியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
சுகாதார செவிலியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 22, 2024 12:59 AM
சேலம்: சேலம், ஆத்துார் சுகாதார மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சந்திரா தலைமை வகித்தார். மாநில இணை செயலர் வனஜா முன்னிலை வகித்தார்.அதில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதியுதவி திட்டப்பணிகளை சமூக நலன், வருவாய் துறைகளிடம் ஒப்படைத்தல்; தாய்சேய் நலப்பணி, தடுப்பூசி, குடும்ப நலப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ள உரிய உத்தரவு வழங்குதல்; சுகாதார செவிலியர்களை கணினி பணிக்கு உட்படுத்துவதையும், அதற்கு மிரட்டுவது, அச்சுறுத்துவதை கைவிட்டு, கணினி பணியை மேற்கொள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஒரு ஆப்ரேட்டர்களை நியமித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாநில துணை தலைவர் கோகிலா, மாவட்ட செயலர் விஜயகலா, பொருளாளர் உமாமகேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.