/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாவட்ட அளவிலான ஓட்டப் பந்தயம் ஹெரிடேஜ் பள்ளி மாணவர்கள் சாதனை
/
மாவட்ட அளவிலான ஓட்டப் பந்தயம் ஹெரிடேஜ் பள்ளி மாணவர்கள் சாதனை
மாவட்ட அளவிலான ஓட்டப் பந்தயம் ஹெரிடேஜ் பள்ளி மாணவர்கள் சாதனை
மாவட்ட அளவிலான ஓட்டப் பந்தயம் ஹெரிடேஜ் பள்ளி மாணவர்கள் சாதனை
ADDED : அக் 29, 2024 01:20 AM
மாவட்ட அளவிலான ஓட்டப் பந்தயம்
ஹெரிடேஜ் பள்ளி மாணவர்கள் சாதனை
வாழப்பாடி, அக். 29-
வாழப்பாடி அருகே, கவர்கல்பட்டி ஹெரிடேஜ் வித்யாலயா பள்ளி மாணவர்கள், தொடர் ஓட்டப் போட்டியில் வெள்ளி, வெண்கலப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சேலம் மாவட்ட தனியார் சி.பி.எஸ்.சி., பள்ளி மாணவர்களுக்கு இடையேயான, தடகள போட்டிகள் சேலத்தில் நடந்தது. இதில், 12 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான, 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில், கவர்கல்பட்டி ஹெரிடேஜ் வித்யாலயா பள்ளி மாணவர்கள் ரித்விக், சுபாஷ், மோகன்ராஜா, கோகுலகிருஷ்ணன் ஆகியோர் வெள்ளி பதக்கம் பெற்றனர். 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவு தொடர் ஓட்டப்பந்தயத்தில் இளவரசன், தமிழினியன், செல்வநித்திஷ், லெவன் ஆகியோர் வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்தனர்.
தொடர் ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைத்த மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர் முனைவர் பெருமாள், துணைத் தலைவர் கண்ணன் பெருமாள் மற்றும் ஆசிரியர்கள் பரிசு வழங்கி பாராட்டினர்.