/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உயர் கல்வி அங்கீகாரம், தரவரிசை விநாயகா மிஷனில் பயிற்சி பட்டறை
/
உயர் கல்வி அங்கீகாரம், தரவரிசை விநாயகா மிஷனில் பயிற்சி பட்டறை
உயர் கல்வி அங்கீகாரம், தரவரிசை விநாயகா மிஷனில் பயிற்சி பட்டறை
உயர் கல்வி அங்கீகாரம், தரவரிசை விநாயகா மிஷனில் பயிற்சி பட்டறை
ADDED : ஏப் 30, 2025 01:21 AM
சேலம்:
சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலையில், 'உயர் கல்வியில் அங்கீகாரம் மற்றும் தரவரிசையை விளக்குதல்' தலைப்பில் பயிற்சி பட்டறை நடந்தது. இயக்குனர்(அங்கீகாரம் மற்றும் தரவரிசை) ஸ்ரீதர் ரெட்டி வரவேற்றார். துணைவேந்தர் சுதிர், என்.ஐ.டி., முன்னாள் இயக்குனர் சந்தீப் சான்சேட்டி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
துணைவேந்தர் சுதிர், தரம், கல்வி சிறப்பின் மிக உயர்ந்த தரத்தை பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். பேராசிரியர் சந்தீப் சான்சேட்டி, 'பல்கலை தரவரிசையில் கல்வி, ஆராய்ச்சியின் தாக்கம்' தலைப்பில் பேசினார்.
நாள் முழுதும் நடந்த பயிலரங்கில், அங்கீகாரம் மற்றும் தரவரிசையில் கல்வி மற்றும் ஆராய்ச்சியின் தாக்கம், தரவு சார்ந்த உத்திகள் பற்றிய, 3 தொழில்நுட்ப அமர்வுகளில் இளம் தொழில் முனைவோர் டாக்டர் திவ்யா, டாக்டர் ஷாலினி சகேலம், பல்கலை இயக்குனர்(இன்னோவேஷன்) ஞானசேகர் ஆகியோருடன், குழு கலந்துரையாடல் நடந்தது. பல்கலை பதிவாளர் நாகப்பன், நிகழ்ச்சியில் பங்கேற்றோருக்கு சான்றிதழ் வழங்கினார். ஜே.எஸ்.எஸ்., பல்கலை ஆராய்ச்சி ஆதரவு சேவை தலைவர் ஷீபா பக்கன் உள்பட பலர் பங்கேற்றனர். இறுதியாக, துணை இயக்குனர்(அங்கீகாரம் மற்றும் தரவரிசை) சபிதா கோகுல்ராஜ் நன்றி தெரிவித்தார்.