/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இலவச பட்டா வழங்க மலைக்கிராமத்தினர் கோரிக்கை
/
இலவச பட்டா வழங்க மலைக்கிராமத்தினர் கோரிக்கை
ADDED : மே 29, 2025 01:49 AM
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, தும்பல்பட்டி ஊராட்சியில் நடுப்பட்டி, மஞ்சபாலி ஆகிய மலைக்கிராமங்கள் உள்ளன. அங்கு புறம்போக்கு நிலத்தில், பூர்விகமாக, 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி வசிக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
இரு ஆண்டுக்கு முன், இலவச வீட்டு மனை பட்டா வழங்க, வீடுகள் கணக்கெடுப்பு, நிலம் அளவீடு செய்து, கோப்பு தயார் செய்யப்பட்டது. ஆனால் பட்டா கிடைக்கவில்லை. அடுத்த மாதம் இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்க, சேலத்துக்கு முதல்வர் வருகிறார். அதில் எங்களுக்கும் பட்டா வழங்க, வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து வருவாய்த்துறையினரிடம் கேட்டபோது, 'இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க, புதிதாக கோப்பு தயார் செய்யும் பணி நடக்கிறது' என்றனர்.