/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாநகராட்சி இடத்தில் மசூதி இந்து முன்னணி கேள்வி
/
மாநகராட்சி இடத்தில் மசூதி இந்து முன்னணி கேள்வி
ADDED : ஆக 08, 2025 01:24 AM
சேலம், சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு, இந்து முன்னணி சேலம் கோட்ட செயலர் சந்தோஷ்குமார் தலைமையில் நிர்வாகிகள் நேற்று வந்தனர். அப்போது ஒரு கண்ணில் 'சுண்ணாம்பு', மறு கண்ணில், 'வெண்ணெய்' என எழுதப்பட்டிருந்த கருப்பு துணியை கண்களில் கட்டியிருந்தனர்.
தொடர்ந்து அவர்கள் அளித்த மனு:
பிரபாத் தியேட்டர் எதிரே மாநகராட்சிக்கு சொந்தமான மயானத்தில், மசூதி கட்டும் பணி நடக்கிறது. அதற்கு அனுமதி வழங்கியதாக கூறுகிறார்கள். அனுமதி இருந்தால் மாநகராட்சி வரைபட அனுமதி, கட்டுமான அனுமதி பெற தேவையில்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அதேநேரம் மாநகராட்சிக்கு சொந்தமான இந்து மயானத்தில் வேலை செய்பவர்களுக்கு வீடு, இறந்தவர்களின் காரியம் செய்ய மண்டபம் அமைத்து தர பரிசீலனை செய்ய வேண்டும்.