தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/வெங்காய மகசூல் அதிகரிக்க 'ஐடியா'

வெங்காய மகசூல் அதிகரிக்க 'ஐடியா'

வெங்காய மகசூல் அதிகரிக்க 'ஐடியா'


ADDED : ஜூலை 20, 2026 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 20, 2026 01:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பனமரத்துப்பட்டி: சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்-பாளர் விஜயன் அறிக்கை:

சேலம் மாவட்டத்தில் வரும், 22 வரை வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பநிலை, 25 முதல், 36 டிகிரி செல்ஷியஸ் வரை காணப்-படும். தென் மேற்கு, மேற்கு திசையில் இருந்து மணிக்கு, 8 முதல், 12 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்.இதனால், 30 நாட்கள் வயதில் உள்ள சின்ன வெங்காய பயி-ருக்கு, துத்தநாக சல்பேட்டை ஒரு லிட்டர் நீருக்கு, 3 கிராம் மற்றும் ஒட்டும் திரவம், 1 மி.லி., என்ற அளவில் கலந்து, காலை அல்லது மாலையில், 15 நாள் இடைவெளியில், 3 முறை, இலை வழியே தெளிக்க வேண்டும். இதன் மூலம் நுனி கருகல் நோயை தடுத்து, வெங்காய மகசூல், தரத்தை மேம்படுத்தலாம்.

கரும்பு பயிருக்கு, சொட்டு நீர் பாசனம் அமைப்பதன் மூலம், மண் ஈரப்பதத்தை சீராக பராமரிக்க முடியும். உழவின்போது கோழிக்கழிவு, மண்புழு உரம் மண்ணில் இடுவதால், மண் உட்-கட்டமைப்பு, மண் வளத்தை மேம்படுத்தலாம். காய்கறி பயிரில் மகசூலை அதிகரிக்க, ஜ.ஜ.எச்.ஆர்., காய்கறி நுண்ணுட்ட கலவை, ஒரு லிட்டர் நீருக்கு, 5 கிராம் அளவில் கலந்து, காலை அல்லது மாலையில் தெளிக்கலாம். இதன் மூலம் பூக்கள் உதிர்வு குறைந்து, வருவாய் இழப்பை தடுக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us