/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'மீண்டும் தி.மு.க.,வுக்கு ஓட்டளித்தால் மின் கட்டணம் ரூ.10,000 ஆக உயரும்'

ADDED : பிப் 10, 2025 07:31 AM
தாரமங்கலம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, ஓமலுார் சட்டசபை தொகுதி சார்பில், தாரமங்கலம், ராமிரெட்டிப்பட்டியில், அ.தி.மு.க., பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. ஓமலுார் எம்.எல்.ஏ., மணி தலைமை வகித்தார். தாரமங்கலம் வடக்கு ஒன்றிய செயலர் மணிமுத்து வரவேற்றார்.
சேலம் புறநகர் மாவட்ட செய லர் இளங்கோவன் பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியின்போது, மக்கள், 200, 300 ரூபாய் மின் கட்டணம் செலுத்தி வந்தனர். இன்று மின் கட்டணம், 5,000 ரூபாய் வருகிறது. 2026 தேர்தலில், தி.மு.க., ஆட்சிக்கு வராது. ஒருவேளை மக்கள் ஓட்டுப்போட்டு, ஆட்சிக்கு வரச்செய்தால், தற்போது, 5,000 ரூபாயாக உள்ள மின் கட்டணம், 10,000 ரூபாயாக உயர்ந்துவிடும். அதனால், 2026 சட்டசபை தேர்தலில், இ.பி.எஸ்., தலைமையில், அ.தி.மு.க., ஆட்சி மலர, அனைவரும் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கிருஷ்ணன், வெற்றிவேல், மாநில அம்மா பேரவை மாநில செயலர் விக்னேஷ், ஓமலுார், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஒன்றிய செயலர்கள் ராஜேந்திரன், செந்தில்குமார், விமல்ராஜ், சித்தேஸ்வரன், சுப்பிரமணி, காங்கேயன், பேரூர் செயலர்கள், சார்பு அணி மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், கிளை பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.