/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பட்டப்பகலில் தி.மு.க., பிரமுகர் வீட்டை திறந்து 20 பவுன் திருட்டு
/
பட்டப்பகலில் தி.மு.க., பிரமுகர் வீட்டை திறந்து 20 பவுன் திருட்டு
பட்டப்பகலில் தி.மு.க., பிரமுகர் வீட்டை திறந்து 20 பவுன் திருட்டு
பட்டப்பகலில் தி.மு.க., பிரமுகர் வீட்டை திறந்து 20 பவுன் திருட்டு
ADDED : மே 23, 2024 07:23 AM
சேலம் : சேலம், மெய்யனுார், பர்மா காலனியை சேர்ந்தவர் சுல்தான், 58. தி.மு.க., பிரதிநிதியான இவர், சேலம் புது பஸ் ஸ்டாண்டில், 3 கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். நேற்று மதியம், 12:00 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு சாவியை வழக்கம்போல் மீட்டர் பெட்டி மீது வைத்து விட்டு, குடும்பத்துடன் அம்மாபேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். மதியம், 2:30 மணிக்கு திரும்பி வந்தபோது, வீடு திறக்கப்பட்டிருந்தது.
அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 20 பவுன் நகைகள், 30,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. மேலும் மேல் மாடி வழியே உள்ளே வந்த மர்ம நபர்கள், மீட்டர் பெட்டியில் இருந்த சாவியை எடுத்து வீட்டை திறந்து திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இதுகுறித்து அவர் புகார்படி பள்ளப்பட்டி போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.
செவிலியிடம் பறிப்புசேலம், சாமிநாதபுரம், அர்த்தனாரி தெருவை சேர்ந்தவர் சாந்தகுமாரி, 48. செவ்வாய்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறார். நேற்று மதியம், 2:10 மணிக்கு பணி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார். சாமிநாதபுரம் அன்னம் மாவு கடை அருகே சென்றபோது, பைக்கில் வந்த இருவர், சாந்தகுமாரி அணிந்திருந்த, 1.2 பவுன் சங்கிலியை பறித்துச்சென்றனர். அவர் புகார்படி பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

