/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புது மஞ்சள் வரத்து அதிகரிப்பு: விலையில் மாற்றமில்லை
/
புது மஞ்சள் வரத்து அதிகரிப்பு: விலையில் மாற்றமில்லை
புது மஞ்சள் வரத்து அதிகரிப்பு: விலையில் மாற்றமில்லை
புது மஞ்சள் வரத்து அதிகரிப்பு: விலையில் மாற்றமில்லை
ADDED : ஏப் 25, 2025 02:16 AM
ஈரோடுபுது வரத்து அதிகரித்தும், மஞ்சள் விலையில் பெரிய அளவில் விலையில் மாற்றம் ஏற்படவில்லை.
ஈரோடு மாவட்டத்தில் மார்ச் இறுதி வாரம் முதல் புதிய மஞ்சள் விற்பனைக்கு வரத்தாகிறது. மே இறுதி வரை அறுவடை நடக்கும். தற்போதைய நிலையில், பழைய மஞ்சள் இருப்பு வைக்கப்பட்டு, புதிய மஞ்சள் அதிகமாக வரத்தான நிலையிலும், விலையில் பெரிய மாற்றம் இல்லை.
இதுபற்றி ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது: தற்போதைய நிலையில் கர்நாடகாவில் இருந்து ஈரோட்டுக்கு வரும் புதிய மஞ்சள் வரத்து குறைந்துள்ளது. தர்மபுரி பகுதி மற்றும் ஈரோடு உட்பட சுற்றுப்பகுதி புதிய மஞ்சள் வரத்தாகிறது. விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. ஏப்.,7ல் குவிண்டாலுக்கு, 1,500 ரூபாய் வரை விலை உயர்ந்து, மீண்டும் குறைந்தது.
தற்போதைய நிலையில் ஈரோடு பகுதியில் முழு அளவில் அறுவடை பணி நடந்து, தயார் செய்யப்பட்டு விற்பனைக்கும் வரத்தாகிறது. அதேநேரம் மஹாராஷ்டிராவில் மிக அதிகமாக அறுவடை நடந்து வருவதால், விற்பனை அதிகமாக நடக்கிறது. தினமும், 50,000 மூட்டை வரை அங்கு வரத்தாவதால், தேவையை அவர்கள் பூர்த்தி செய்வதால், இங்கு விலை உயரவில்லை.
அங்கு இன்னும், ஒரு மாதத்துக்கு இதேபோன்ற அறுவடை நடக்கும். அதேநேரம் பிற மாநிலங்களில் நிஜாமாபாத், சாங்கிளியில் புதிய மஞ்சள் வரத்து குறைந்துவிட்டது. ஈரோடு மாவட்டத்தில் ஜூனில்தான் முழு அளவில் நடவுப்பணி துவங்கும். அப்போது மீண்டும் விலையில் மாற்றம் ஏற்படும். இவ்வாறு கூறினார்.

