/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று சுதந்திர தின விழா; 3,500 போலீசார் பாதுகாப்பு
/
இன்று சுதந்திர தின விழா; 3,500 போலீசார் பாதுகாப்பு
இன்று சுதந்திர தின விழா; 3,500 போலீசார் பாதுகாப்பு
இன்று சுதந்திர தின விழா; 3,500 போலீசார் பாதுகாப்பு
ADDED : ஆக 15, 2024 07:15 AM
சேலம்: இன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவுப்படி, சேலம் மாநகரில், 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
குறிப்பாக முக்கிய கோவில், தேவாலயம், மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில், போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பழைய, புதிய பஸ் ஸ்டாண்டுகள், 5 ரோடு உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி ரவுண்டானாக்கள் உள்பட பல்வேறு இடங்களில் வாகன சோதனை, தங்கும் விடுதிகளில் சோதனை பணியில் ஈடுபடுகின்றனர். சந்தேகப்படும்படி யாரும் இருந்தால் உடனே போலீசாருக்கு தகவல் தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சேலம் மாவட்ட புறநகர் பகுதிகளில், 1,200 போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் டி.ஐ.ஜி., உமா உத்தரவுப்படி, சரகத்துக்குட்பட்ட நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், 3,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.