/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் 'மொபைல் பேங்கிங்' சேவை அறிமுகம்
/
இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் 'மொபைல் பேங்கிங்' சேவை அறிமுகம்
இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் 'மொபைல் பேங்கிங்' சேவை அறிமுகம்
இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் 'மொபைல் பேங்கிங்' சேவை அறிமுகம்
ADDED : ஆக 02, 2025 01:12 AM
சேலம், அஞ்சல் துறையின், 'இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ்' வங்கியில், 12 கோடிக்கு அதிகமான வாடிக்கையாளர்கள், சேமிப்பு கணக்குகளை தொடங்கி உள்ளனர். புதுமைப்பெண், தமிழ் புதல்வன், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பி.எம்.கிசான் கணக்குகள் உள்ளிட்டவை அடங்கும்.
அனைத்து வித சேமிப்பு கணக்குகளிலும் வாரிசு நியமனம் செய்வதற்கான வசதி, தமிழகத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் உள்ளது. வாடிக்கையாளர்கள் பிளே ஸ்டோரில் உள்ள, IPPB மொபைல் செயலி மூலம், அவரவர் வாரிசு நியமனம் செய்வது, மாற்றம் செய்தல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். மேலும் செயலியை தபால்காரர் உதவியுடன், தங்கள் கணக்கை ஆதார் சீடிங் செய்து அரசின் நேரடி மானியத்தை பெற முடியும். தவிர இச்செயலியை வங்கி கணக்குடன், உங்கள் அஞ்சல் சேமிப்பு கணக்கையும் இணைத்து, ஆன்லைன் பரிவர்த்தனை செய்யலாம்.
அத்துடன் செல்வ மகள், தங்க மகன், அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு எளிமையாக வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் பணம் செலுத்தலாம். வியாபாரி கள், கடைகளில் யு.பி.ஐ., ஸ்டிக்கர் அட்டை மூலம் பணம் பெறும் வசதியும் இலவசமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள, சேலம் கோட்ட கண்காணிப்பாளர்கள் முனிகிருஷ்ணன்(கிழக்கு), தனலட்சுமி(மேற்கு) கேட்டுக்கொண்டுள்ளனர்.