/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி இந்திய கம்யூ.,முற்றுகை போராட்டம்
/
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி இந்திய கம்யூ.,முற்றுகை போராட்டம்
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி இந்திய கம்யூ.,முற்றுகை போராட்டம்
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி இந்திய கம்யூ.,முற்றுகை போராட்டம்
ADDED : செப் 28, 2024 01:18 AM
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி
இந்திய கம்யூ.,முற்றுகை போராட்டம்
ஆத்துார், செப். 28-
ஆத்துாரில், டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆத்துார், ரயிலடி தெருவில், டாஸ்மாக் கடை (எண்: 7141) உள்ளது. இந்த கடை, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த பாதையில், ரயில்வே ஸ்டேஷன், நகராட்சி நடுநிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி பூங்கா, பி.எஸ்.என்.எல்., அலுவலகம், தனியார் மருத்துவமனை, பள்ளி மற்றும் கடம்பூர், கூலமேடு, பைத்துார் செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ளது.
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, அப்பகுதி மக்கள், அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. நேற்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், வட்ட செயலர் கவிதா தலைமையில், 50க்கும் மேற்பட்டோர், டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த
சென்றனர்.
ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையிலான போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றம் செய்ய வேண்டும் என, கோஷம் எழுப்பினர். ஒரு மாதத்திற்குள், டாஸ்மாக் கடையை அகற்றவில்லை எனில், கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என, தெரிவித்தனர். போலீசார், 'சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்