ADDED : டிச 28, 2024 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: இந்திய மாணவர் சங்கம் சார்பில், சேலம் அரசு கலைக்கல்லுாரி முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் பவித்ரன் தலைமை வகித்தார்.
அதில் சென்னை, அண்ணா பல்கலை மாண-விக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் குற்றம் செய்த அனைவரையும் கைது செய்தல்; மாணவி அடையாளங்-களை வெளியிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுத்தல்; கல்வி நிலையங்களில் பெண்கள் பாதுகாப்புக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்-தப்பட்டன. நிர்வாகிகள் டார்வின், கோகுல் உள்பட பலர் பங்-கேற்றனர்.