/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அனைத்து கரும்புகளையும் கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
/
அனைத்து கரும்புகளையும் கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
அனைத்து கரும்புகளையும் கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
அனைத்து கரும்புகளையும் கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
ADDED : ஜன 07, 2024 10:33 AM
இடைப்பாடி: பூலாம்பட்டி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு கரும்புகள் அனுப்பும் பணி நடந்தது. ஆனால் அனைத்து கரும்புகளையும் கொள்முதல் செய்ய, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்புடன், 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதற்கு ஆண்டுதோறும், ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட, 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் கரும்புகளை வழங்க, சேலம் மாவட்டம் பூலாம்பட்டி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இதை நம்பியே இடைப்பாடி தாலுகாவில் உள்ள பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனுார், சிலுவம்பாளையம், கோனேரிப்பட்டி, பூமணியூர், கொங்கணாபுரம், கோரணம்பட்டி, சமுத்திரம், வெள்ளாளபுரம் பகுதிகளில், 700க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள், செங்கரும்பை விளைவித்துள்ளனர்.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு வினியோகிக்க உள்ள கரும்புகளை கொள்முதல் செய்ய, மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ரவிக்குமார், வேளாண் துறை சேலம் மாவட்ட இணை இயக்குனர் சிங்காரம், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், நேற்று கூடக்கல், பூலாம்பட்டி, குப்பனுார் பகுதிகளில் விளைவித்துள்ள கரும்புகளை பார்வையிட்டனர்.
அதேநேரம் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் வினியோகிக்க, பூலாம்பட்டியில் கொள்முதல் செய்யப்பட்ட கரும்புகள், லாரிகள் மூலம் அனுப்பும் பணி நேற்று விறுவிறுப்பாக நடந்தது.
கூடக்கல் விவசாயி வெங்கடாஜலம் கூறுகையில், ''கூட்டுறவு சங்கத்துக்கு பதிவு செய்ய சென்றபோது, 250 கட்டு கொள்முதல் செய்வதாக தெரிவித்தனர். மீதி கரும்புகளை விற்க முடியாது என்பதால், தனி நபர்களுக்கு அனைத்து கரும்புகளையும் விற்றுவிட்டேன். அதனால் அனைத்து கரும்புகளையும் அரசு கொள்முதல் செய்தால் விவசாயிகள் பயன்பெறுவர்,'' என்றார்.
கூடக்கல் விவசாயி கோபால் கூறுகையில், ''சில ஆண்டுகளாக சேலம் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்க அதிகாரிகளும் வந்து கொள்முதல் செய்தனர். தற்போது கரும்புகளை கொள்முதல் செய்ய கூட்டுறவு அதிகாரிகள் வருவதில்லை. இதனால் கூட்டுறவு சங்கத்தினர், யாரை சொல்கின்றனரோ, அவர்களின் விவசாய நிலங்களில் மட்டும் கரும்பு வெட்டப்படுகிறது. மற்ற விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்,'' என்றார்.