/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாளை தீவிர சிகிச்சை கருத்தரங்கு கோகுலம் மருத்துவமனை ஏற்பாடு
/
நாளை தீவிர சிகிச்சை கருத்தரங்கு கோகுலம் மருத்துவமனை ஏற்பாடு
நாளை தீவிர சிகிச்சை கருத்தரங்கு கோகுலம் மருத்துவமனை ஏற்பாடு
நாளை தீவிர சிகிச்சை கருத்தரங்கு கோகுலம் மருத்துவமனை ஏற்பாடு
ADDED : ஜூன் 29, 2024 02:39 AM
சேலம்: கோகுலம் மருத்துவமனை சார்பில், தீவிர சிகிச்சை குறித்த கருத்தரங்கு, ரேடிசன் ஓட்டலில் நாளை நடக்க உள்ளது.
இதுகுறித்து சேலம் கோகுலம் மருத்துவமனை மேலாண் இயக்குனர் அர்த்தனாரி கூறியதாவது:
ரத்தக்குழாய் அடைப்பால் ஏற்படும் மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், கிருமி தாக்கம் போன்றவற்றால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மூளை, இருதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் செயலிழக்கும்போது தீவிர சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.
செயற்கை சுவாச கருவிகள், ரத்த சுத்திகரிப்பு கருவிகள், பிளாஸ்மா, மாற்று கருவிகள், பேஸ்மேக்கர் கருவிகள் எக்மோ, ஐ.ஏ.பி.பி., போன்ற அதிநவீன சிகிச்சை வசதிகளால் உறுப்புகள் செயலிழப்பை சரி செய்ய இயலும்.
இதுதொடர்பாக, கோகுலம் மருத்துவமனை சார்பில் ஜூன், 30(நாளை) காலை, 10:00 மணிக்கு ஓமலுார் பிரதான சாலையில் உள்ள ரேடிசன் ஓட்டலில், தீவிர சிகிச்சைகள் பற்றிய கருத்தரங்கு நடக்க உள்ளது. வெவ்வேறு துறைகளை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள், பல்வேறு தலைப்புகளில் பேச உள்ளனர். இதன்மூலம் சேலம் அதை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மருத்துவர்கள் பயன்பெற உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.