/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சர்வதேச உரிமை கழக மாவட்ட அலுவலகம் திறப்பு
/
சர்வதேச உரிமை கழக மாவட்ட அலுவலகம் திறப்பு
ADDED : ஜன 27, 2025 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சர்வதேச உரிமை கழக, சேலம் மாவட்ட அலுவலக திறப்பு விழா, ஸ்வர்ணபுரியில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் கார்த்திக் ராஜேந்திரன் தலைமை வகித்தார். நிறுவன தலைவர் மோசஸ் செல்லத்துரை, அலுவலகத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த அலுவலகம் மூலம் ஏழை மக்களுக்கு வழக்கு சட்ட உத-விகள், மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை உள்-ளிட்ட உதவிகள் வழங்கப்படும் என, விழாவில் தெரிவிக்கப்பட்-டது. மாநில பொதுச்செயலர் ரவிக்குமார், துணை தலைவர் காளிராஜ் பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் கார்த்திக்-கண்ணன், கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் உள்-பட பலர் பங்கேற்றனர்.

