/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இயற்கை பேரிடர் அறிய புது செயலி அறிமுகம்
/
இயற்கை பேரிடர் அறிய புது செயலி அறிமுகம்
ADDED : அக் 13, 2024 08:29 AM
சேலம்: சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:
இயற்கை பேரிடரை எதிர்கொள்ளவும், முன்னெச்சரிக்கை செய்தி-களை பெறவும், தமிழக அரசு,
'டிஎன் - அலர்ட்' எனும் புது செய-லியை உருவாக்கியுள்ளது. இதை மக்கள் பயன்படுத்தி, வானிலை
தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை அறியலாம். குறிப்பாக தற்போதைய வானிலை தகவல்,
வானிலை முன்னறிவிப்பு மழை, இடியுடன் கூடிய மழை, மின்னல், எச்சரிக்கை, ஒவ்வொரு மணி
நேரத்துக்கு வானிலை அறிவிப்பு, பெறப்பட்ட மழை அளவு, அணைகளின் நீர்மட்டம், வெள்ளம்
பாதிக்கப்படக்கூடும் என கருதப்படுகிற வசிப்பிட பகுதிகள் உள்ளிட்ட விபரங்களை
அறியலாம். மேலும் பேரிடர் தொடர்பான புகார்கள் பதிவு செய்யும் வசதி உள்ளது. அதனால் சேலம்
மாவட்ட மக்கள், இந்த செயலியை பதிவிறக்கி பயன் பெறலாம்.