/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறையில் கஞ்சா, மொபைல் வீசியது குறித்து விசாரணை
/
சிறையில் கஞ்சா, மொபைல் வீசியது குறித்து விசாரணை
ADDED : செப் 09, 2025 01:40 AM
சேலம், சேலம் மத்திய சிறையில் 1,300 க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சேலம் மத்திய சிறையில் அடிக்கடி கஞ்சா, மொபைல்போன் உள்ளிட்ட புழக்கம் அதிகரித்து வருகிறது. இதை சிறை போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் மத்திய சிறையில் நேற்று காலை, 5:45 மணிக்கு, 16 வது தொகுதியின் பின்பகுதியில், டேப்பால் சுற்றப்பட்ட நிலையில் கிடந்த பொட்டலத்தை சிறை போலீசார் கைப்பற்றினர். அதை திறந்து பார்த்தபோது, 45 கிராம் கஞ்சா, மொபைல்போன் டேட்டாகேபிள், அடாப்டர் மற்றும் பேட்டரி ஆகியவை இருந்ததை கண்டு அதிர்ச்சிடைந்தனர். யார் வீசியது என தெரியவில்லை, இது குறித்து, ஜெயிலர் சிவானந்தம் அளித்த புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.