/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆசிரியர் வீட்டில் நகையை திருடியது பெண்ணா என விசாரணை
/
ஆசிரியர் வீட்டில் நகையை திருடியது பெண்ணா என விசாரணை
ஆசிரியர் வீட்டில் நகையை திருடியது பெண்ணா என விசாரணை
ஆசிரியர் வீட்டில் நகையை திருடியது பெண்ணா என விசாரணை
ADDED : நவ 22, 2025 01:24 AM
இடைப்பாடி, இடைப்பாடியில், ஆசிரியர் வீட்டில் நகை திருட்டில் ஈடுபட்டது பெண்ணா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இடைப்பாடி, அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அரசு பள்ளி ஆசிரியர் செந்தில்குமரவேல், 58. தற்காலிக பணி நீக்கத்தில் இருந்து வருகிறார். இவரது மனைவி ஜூலி, செட்டிமாங்குறிச்சி பகுதியில் ஆசிரியராக உள்ளார். நேற்று முன்தினம் இவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த, 33 பவுன் தங்க நகை, 31,500 ரூபாய் திருட்டு போனது. சங்ககிரி டி.எஸ்.பி., தனசேகரன், இன்ஸ்பெக்டர்கள் இடைப்பாடி பேபி, மகுடஞ்சாவடி செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, பெண் ஒருவர் அங்கு வந்து சென்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அந்த பெண் எந்த தெரு வழியாக சென்றார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

