ADDED : அக் 26, 2025 01:15 AM
சேலம், சேலம் அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:
சேலம் அரசு ஐ.டி.ஐ.,யில், 2025ம் ஆண்டு நேரடி சேர்க்கை, வரும், 31 வரை நடக்க உள்ளது. அதில் கடைசலர், டிஜிட்டல் போட்டோகிராபர், இன்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ், டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீஷியன் போன்ற பிரிவுகளில் சேரலாம். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கைபேசி, இ - மெயில் ஐ.டி., ஆதார், மதிப்பெண், மாற்று, ஜாதி சான்றிதழ்கள், மார்பளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வந்து சேரலாம்.
விண்ணப்பம், சேர்க்கை கட்டணம், ஓர் ஆண்டுக்கு ஒரு பிரிவுக்கு, 235 ரூபாய், இரு பிரிவுகளுக்கு, 245 ரூபாய் செலுத்த வேண்டும். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதம், 750 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
பாடநுால், சைக்கிள், சீருடை, வரைபட கருவி, காலணி, பஸ்பாஸ் உள்ளிட்ட சலுகைகளும், பயிற்சி முடித்தபின், முன்னணி நிறுவனங்களில் வளாக நேர்காணல் வாய்ப்பு வழங்கப்படும்.
விபரங்களுக்கு, 94427 94071, 79043 15060 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

