/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பேரிகார்டு' எடுக்கவிடாமல் தி.மு.க., மிரட்டல் ஜல்லிக்கட்டு கேலரி தொழிலாளி புகார்
/
பேரிகார்டு' எடுக்கவிடாமல் தி.மு.க., மிரட்டல் ஜல்லிக்கட்டு கேலரி தொழிலாளி புகார்
பேரிகார்டு' எடுக்கவிடாமல் தி.மு.க., மிரட்டல் ஜல்லிக்கட்டு கேலரி தொழிலாளி புகார்
பேரிகார்டு' எடுக்கவிடாமல் தி.மு.க., மிரட்டல் ஜல்லிக்கட்டு கேலரி தொழிலாளி புகார்
ADDED : மே 11, 2025 01:23 AM
ஆத்துார், ஜல்லிக்கட்டுக்கு விழா நடத்த தாமதமாகி வரும் நிலையில், அதற்கு அமைத்த கேலரி, 'பேரிகார்டு'களை எடுக்கவிடாமல், தி.மு.க.,வினர் மிரட்டுவதாக, அதன் தொழிலாளி, எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே கீரிப்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகரன், 40. இவர் நேற்று, ஆத்துார் டி.எஸ்.பி., - சேலம் எஸ்.பி., அலுவலகங்களில் அளித்த புகார் மனு:
ஜல்லிக்கட்டு விழாவுக்கு பேரிகார்டு, கேலரி அமைக்கும் தொழில் செய்கிறேன். கடந்த ஏப்., 1ல், தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்து தலைவி கவிதாவின் கணவரான, தி.மு.க.,வை சேர்ந்த, கவுன்சிலர் ராஜா, பழனிமுத்து, சுரேஷ் உள்பட, 6 பேர், ஜல்லிக்கட்டு விழாவுக்கு, பேரிகார்டு
அமைக்கும்படி கூறினர். ஏப்., 20ல் விழா நடத்த, பேரிகார்டு, கேலரி என, 9.80 லட்சம் ரூபாய் என ஒப்புக்கொண்டு பணி மேற்கொண்டேன். 8 லட்சம் ரூபாய் வழங்கினர். 20ல் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை.
மறு தேதியில் விழா நடத்துவதாகவும், அதற்கு இழப்பீடு வழங்குவதாகவும் கூறினர். இதுவரை ஜல்லிக்கட்டு நடக்கவோ, இழப்பீடு வழங்கவோ இல்லை. விழாவுக்கு அனுமதி கிடைக்கும் வரை, என் பொருட்களான பேரிகார்டு, கேலரிகளை கழற்றக்கூடாது என மிரட்டுகின்றனர். வாடகைக்கு வாங்கி வந்த பொருட்களுக்கு, நான் பணம் செலுத்தி வருகிறேன். தம்மம்பட்டி போலீசில் புகார் செய்தபோது, தி.மு.க.,வினர், போலீசார் முன்னிலையில் மிரட்டுகின்றனர். இழப்பீடு தொகையுடன், என் பொருட்களை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
'மிரட்டவில்லை'
கவுன்சிலர் ராஜா கூறியதாவது: ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடு செய்தபோது, உரிய நேரத்தில் பேரிகார்டு கட்டாததால் அனுமதி பெறுவது தாமதமாகிவிட்டது. ஒரு மாதத்துக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளதால், சில நாட்களில் அனுமதி பெற்று விழா நடத்த உள்ளோம். உள்ளூரில் உள்ள, தி.மு.க., கோஷ்டி பிரச்னையில் சிலர், பேரிகார்டு உரிமையாளரை துாண்டிவிட்டு விழாவை நடத்த விடாமல் செய்ய முயற்சிக்கின்றனர். விழா நடத்திய பின், பேரிகார்டு, கேலரி எடுத்துச்செல்லும்படி கூறிவிட்டோம். உரிமையாளரை மிரட்டவில்லை. பேரிகார்டுக்கு, 9 லட்சம் ரூபாய் வழங்கிவிட்டோம்,'' என்றார்.