/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தோஷம் கழிப்பதாக பெண்ணிடம் நகை பறிப்பு
/
தோஷம் கழிப்பதாக பெண்ணிடம் நகை பறிப்பு
ADDED : செப் 29, 2024 01:01 AM
தோஷம் கழிப்பதாக
பெண்ணிடம் நகை பறிப்பு
சேலம், செப். 29-
சேலம், குகை, சிவனார் தெருவை சேர்ந்த யுவராணி, 48, பலகார கடை நடத்துகிறார். இவரிடம் நேற்று மதியம் ஒருவர் குறி சொல்வது போல் வீட்டுக்கு வந்தார். தொடர்ந்து யுவராணியிடம், 'உங்களுக்கு இருக்கும் தோஷத்தை கழிக்க, பூஜை செய்ய வேண்டும்' என கூறியுள்ளார்.
அதை நம்பிய யுவராணி, அவர் அணிந்திருந்த ஒரு பவுன் நகையை, அந்த மர்ம நபர் தெரிவித்ததுபோல், அவர் வைத்திருந்த செம்பில் கழற்றி போட்டார்.
தொடர்ந்து அவர், 'பூஜை முடித்து நான் வெளியே சென்றதும், செம்பில் உள்ள நகையை எடுத்துக்கொள்ளுங்கள்' என கூறியுள்ளார். அவரும் சென்றதும், செம்பை பார்த்த யுவராணி, நகையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அவர் புகார்படி, செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.