நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: தாரமங்கலம் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலில், கஞ்சி கலய ஊர்வலம் நேற்று நடந்தது. ஜலகண்டாபுரம் சாலை அருகே உள்ள கோவிலில், அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து ஊர்வலம் தொடங்கியது.
அதில், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள், கஞ்சி கலயம், முளைப்பாரி எடுத்துச்சென்றனர். முக்கிய வீதிகள் வழியே சென்ற ஊர்வலம், மீண்டும் கோவிலில் நிறைவடைந்தது. பின் அன்னதானம் வழங்கப்பட்டது.

