தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரயிலில் இருந்து விழுந்த கேரள மாணவர் பலி

ரயிலில் இருந்து விழுந்த கேரள மாணவர் பலி

ரயிலில் இருந்து விழுந்த கேரள மாணவர் பலி


ADDED : ஜன 31, 2025 02:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2025 02:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: கேரள மாநிலம் மலப்புரம் அருகே பெருந்தல்மன்னாவை சேர்ந்தவர் நவுபல் கடம்போட். இவரது மகன் நய்மு ரஷீத், 16. இவர், சொர்னுாரில் உள்ள அரபிக் பள்ளியில், பிளஸ் 1 படித்தார். அவர் உள்பட, 12 மாணவர்களை, பள்ளியில் இருந்து கல்வி சுற்றுலாவாக, ஹைதராபாத்துக்கு அழைத்துச்செல்ல முடிவு செய்தனர். தொடர்ந்து நேற்று காலை, 6:40க்கு, கச்சேகுடா ரயிலில் புறப்பட்டனர்.

காலை 10:00 மணிக்கு, சேலத்தை கடந்து, காட்பாடி அருகே சென்றபோது, நய்மு ரஷீத் காணாதது தெரிந்தது. ஆசிரியர்கள், ரயில்வே போலீசில் தகவல் தெரிவித்து தேடினர். இந்நிலையில், தின்னப்பட்டி ரயில்வே ஸ்டேஷன் பகுதியில், 16 வயது மதிக்கத்-தக்க சிறுவன், தண்டவாளத்தில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்-பட்டது. சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்ததில், ரயிலில் சென்ற நய்மு ரஷீத் என உறுதியானது. மேலும் படிக்கட்டு அருகே வந்து, தவறி விழுந்து உயிரிழந்தது தெரிந்தது. இதுகு-றித்து கேரளாவில் உள்ள சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரி-விக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us