/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
4 கிலோ கஞ்சா பறிமுதல் கேரள வாலிபர்கள் கைது
/
4 கிலோ கஞ்சா பறிமுதல் கேரள வாலிபர்கள் கைது
ADDED : ஆக 25, 2025 03:18 AM
மேட்டூர்: மேச்சேரி போலீசார், எம்.காளிப்பட்டியில் நேற்று ரோந்து சென்-றனர். அப்போது தனியார் கல்லுாரி அருகே சாலையோரம் சந்தே-கத்துக்கு இடமாக இருவர் நின்றிருந்தனர். அவர்களது கையில் வைத்திருந்த பையை, போலீசார் சோதனை செய்தனர். அதில், 80,000 ரூபாய் மதிப்பில், 4.8 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்ததில், கேரளம், ஆலப்புழா, மாவேலிக்கரை அடுத்த கிணறுவிலாவை சேர்ந்த ஹரிகிருஷ்ணா, 27, அருகே உள்ள தாமரைக்குளம், பரளிவடக்கை சேர்ந்த விஷ்ணு, 27, என தெரிந்தது. இருவரையும், போலீசார் கைது செய்தனர்.
விற்றவருக்கு 'காப்பு'சேலம், அம்மாபேட்டை போலீசார், குமரகிரி ஏரி அருகே நேற்று ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக, ஒருவர் நின்றிருந்தார்.
அவரை பிடித்து சோதனை செய்தபோது, 100 கிராம் கஞ்சா வைத்திருந்தார். விசாரணையில் தாதகாப்பட்டி, சண்முகா நகரை சேர்ந்த ராமு, 43, என்பதும் கஞ்சாவை விற்க வைத்திருந்ததும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.