sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கடத்தப்பட்ட தொழிலதிபர் போலீசில் ஒப்படைப்பு ஈரோட்டை சேர்ந்த ஒருவர் கைது

/

கடத்தப்பட்ட தொழிலதிபர் போலீசில் ஒப்படைப்பு ஈரோட்டை சேர்ந்த ஒருவர் கைது

கடத்தப்பட்ட தொழிலதிபர் போலீசில் ஒப்படைப்பு ஈரோட்டை சேர்ந்த ஒருவர் கைது

கடத்தப்பட்ட தொழிலதிபர் போலீசில் ஒப்படைப்பு ஈரோட்டை சேர்ந்த ஒருவர் கைது


ADDED : டிச 22, 2024 03:30 AM

Google News

ADDED : டிச 22, 2024 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலத்தில் கடத்தப்பட்ட தொழில் அதிபரை, போலீசில் ஒப்ப-டைத்த பின், அவரை அழைத்து வந்த, கடத்தல் கும்பலை சேர்ந்-தவரை போலீசார் கைது செய்தனர்.

சேலம், சீரங்காபாளையம், ராஜாஜி தெருவை சேர்ந்த தொழில் அதிபர் ரவிக்குமார், 51. இவர் சேலம், திருச்செங்கோடு, கோவை, உடுமலைப்பேட்டை உள்ளிட்ட இடங்களில், சொந்த-மாக நுால் மில் நடத்தினார். தொழில் நஷ்டத்தால் கடைசியாக கோவையில் உள்ள மில்லை மட்டும் நடத்தி வந்தார். அதை வைத்து வங்கியில் 35 கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாததால், சமீபத்தில் அந்த நுால் மில் ஜப்தி செய்-யப்பட்டது.கோவை நுால் மில்லை நம்பி, 1.5 கோடி ரூபாய் கடன் கொடுத்த ஈரோட்டை சேர்ந்த தேவேந்திர சோப்ரா, நாகராஜ் ஆகியோர் கடனை திருப்பி தரும்படி கேட்டுள்ளனர். தொடர்ந்து நேற்று முன்தினம் இரவில் அவர்கள் கும்பலாக காரில் வந்து, தொழிலதி-பரிடம் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தனர். அப்போது ஏற்-பட்ட கடும் வாக்கு

வாதத்தில் தொழிலதிபரை காரில் கடத்திச்சென்றனர். இதுகுறித்து ரவிக்குமாரின் தம்பி அனில்குமார் புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார்,

அங்கிருந்த, 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தனர்.

மேலும் சோதனைச்சாவடி போலீசாரை உஷார்படுத்தி, சுங்கச்சாவ-டியில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. தவிர ரவிக்குமாரின் மொபைல் மூலம், அவரது இருப்பிடம் கண்டறி-யப்பட்டது. அதனால் கடத்தல் கும்பல் உஷாராகி, அவர்களில் ஒருவர், ரவிக்குமாரை அழைத்துக்கொண்டு, இரவு, 11:45 மணிக்கு, அஸ்தம்பட்டி போலீசில் ஆஜர்படுத்தினார்.

விசாரணையில் அந்த நபர், ஈரோடு, நசியனுார், முள்ளம்பட்-டியை சேர்ந்த நாகராஜ், 57, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், ரவிக்குமாரிடமும் கடத்தல் சம்பவம் குறித்தும் தொடர்ந்து விசாரிக்கின்றனர். நாகராஜ் வாக்குமூலப்படி, ஈரோட்டை சேர்ந்த தேவேந்திர சோப்ராவை கைது செய்ய, தனிப்-படை போலீசார் விரைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us