ADDED : ஜூலை 25, 2026 05:23 AM
சேலம்; மாணவர்களின் புதுமை, சிந்தனைத்திறன்களை வளர்க்க, இயந்திர மாதிரிகளை வடிவமைக்க, சொசைட்டி ஆப் ஆட்டோமோட்டிவ் இன்ஜி-னியர்ஸ், தென் மாநில அளவில், கோவை, ஹிந்-துஸ்தான் கல்லுாரியில், 'பாஜா - 2026' போட்-டியை நடத்தியது.
பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முன்னணி பொறியியல் கல்லுாரிகள், பல்கலைக்கழகங்களில் இருந்து, 600-க்கும் மேற்-பட்ட பொறியியல் மாணவர்கள் பங்கேற்றனர். அதில் சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரி இயந்திரவியல் துறை மாணவர்களான, 'டேர்ட் டிமொன் ரேஸிங்' அணி, பாஜா வாகனத்தை வடி-வமைத்து, தொழில்நுட்ப ஆய்வு, வடிவமைப்பு மதிப்பீடு, வணிக விளக்க காட்சி, செலவின அறிக்கை, பிரேக் சோதனை, வேக உயர்வு, இயக்-கத்திறன், இழுவைத்திறன், மதிப்பீடு உள்ளிட்ட பல்வேறு பிரிவு களில் நடந்த போட்டி கள் முடிவில், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். இதன்மூலம், 1.4 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை பெற்றனர். சாதனை படைத்த மாணவர்கள், வழிகாட்டிய தொழில் துறை பயிற்சி பேராசிரியர் சண்முகம், பாஜா அணி ஒருங்கிணைப்பாளர் நவீன்குமார் ஆகியோரை, நாலெட்ஜ் அறக்கட்-டளை தலைவர் சீனிவாசன், செயலர் குமார், பொருளாளர் சுரேஷ்குமார், கல்லுாரி முதல்வர் விசாகவேல், இயந்திரவியல் துறைத்தலைவர் பிரபாகரன், அனைத்து இயக்குனர்கள் பாராட்-டினர்.
