ADDED : நவ 29, 2026 01:17 AM
அ நிறம் | அளவு
சேலம்: சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை, திருட்டு என தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்த, மேட்டூர், கருமலைக்கூடலை சேர்ந்த கார்த்தி, 24, அபிமன்யு, 22, ஆகியோர் கடந்த, 1ல் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வந்ததால், இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, சேலம் கலெக்டர் இளம் பகவத், நேற்று உத்தரவிட்டார். இதனால் இருவரும் ஓராண்டுக்கு சிறையில் அடைக்கப்பட்டனர்.
