/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிேஷகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
/
லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிேஷகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிேஷகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிேஷகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ADDED : ஜன 25, 2024 09:51 AM
நங்கவள்ளி: நங்கவள்ளி, லட்சுமி நரசிம்மர் மற்றும் சோமேஸ்வர சுவாமி கோவில் கும்பாபி ேஷக விழா கோலாகலமாக நடந்தது.
நங்கவள்ளியில், 900 ஆண்டுகள் பழமையான லட்சுமி நரசிம்மர் மற்றும் சோமேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. சைவம், வைணவம் ஒரு சேர அமைந்துள்ள இக்கோவிலில் கடந்த, 20ம் தேதி முதல் கும்பாபி ேஷக பூஜைகள் துவங்கியது. நேற்று காலை நான்காம் கால யாக வேள்வி, கண் திறப்பு, வேள்வி நிறைவு செய்தல், யாத்ரா தானம், கும்ப ப்ராயணம் முடிவுற்று காலை, 10:00 மணிக்கு மூலஸ்தன கோபுரம், ராஜ கோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபி ேஷகம் கோலாகலமாக நடந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள்
கும்பாபிேஷக விழாவை கண்டு
களித்தனர். இரண்டு ட்ரோன் மூலம் கோபுரங்களுக்கு மலர் துாவப்பட்டும், புனித நீரும் ட்ரோன் வழியாக தெளிக்கப்பட்டது. கோவிலை சுற்றி வசிப்பவர்கள், வீடுகளின் மாடியின் நின்றபடி தரிசனம் செய்தனர். விழாவில் சேலம் ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சபர்மதி, உதவி ஆணையர் ராஜா, ஆய்வாளர்
கல்பனாதத், கோவில் செயல்
அலுவலர் திருஞானசம்பந்தர் மற்றும் விழா குழுவினர் பங்கேற்றனர்.
மாலையில் கோவில் வளாகத்தில் திருக்கல்யாண உற்சவம், கருட வாகனத்தில் திருவீதி உலா, அன்னதானம் ஆகியவை நடந்தது. ஓமலுார்
டி.எஸ்.பி., சங்கீதா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நங்கவள்ளி தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு கருவி மூலம் பக்தர்கள்
மத்தியில் புனித நீரை தெளித்தனர்.