/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போர்வெல்லில் விழுந்த ஆட்டுக்குட்டி மீட்பு
/
போர்வெல்லில் விழுந்த ஆட்டுக்குட்டி மீட்பு
ADDED : நவ 03, 2024 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி, நவ. 3-
கெங்கவல்லி, பாலக்காட்டை சேர்ந்த, விவசாயி ஆனந்த், 40. இவரது தோட்டத்தில் பயன்பாடற்ற நிலையில், 560 அடி ஆழ ஆழ்துளை குழாய் கிணறு உள்ளது. அதில் நேற்று மதியம், 3:40 மணிக்கு ஆட்டுக்குட்டி தவறி விழுந்தது. 4:00 மணிக்கு தகவல் கிடைத்து, கெங்கவல்லி தீயணைப்பு துறையினர், 25 நிமிடத்தில் அங்கு சென்றனர்.
பின், 20 அடி ஆழத்தில் சிக்கியிருந்த ஆட்டுக்குட்டியை, கயிறு, கொலுசு உதவியுடன், 15 நிமிடத்தில் மீட்டு விவசாயியிடம் ஒப்படைத்தனர்.