/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குஜராத் மருத்துவரிடம் 'லேப்டாப்' திருட்டு
/
குஜராத் மருத்துவரிடம் 'லேப்டாப்' திருட்டு
ADDED : அக் 18, 2025 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுாரை சேர்ந்தவர் அரவிந்த், 28. குஜராத்தில் அரசு மருத்துவராக பணிபுரிகிறார். தீபாவளியை முன்னிட்டு, சொந்த ஊர் புறப்பட்டார்.
நேற்று முன்தினம், சேலம் வந்த அவர், ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, புது பஸ் ஸ்டாண்டுக்கு, டவுன் பஸ்சில் பயணித்தார். அப்போது அவரது இருக்கை அருகே வைத்திருந்த, 'லேப்டாப்' பேக்கை, மர்ம நபர் திருடிச்சென்றது தெரியவந்தது. அதில் மொபைல், டேப் உள்ளிட்டவையும் இருந்துள்ளன. இதுகுறித்து அவர் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார்
விசாரிக்கின்றனர்.