/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
லாரி நிறுவனத்தில் 'லேப்டாப்' திருட்டு
/
லாரி நிறுவனத்தில் 'லேப்டாப்' திருட்டு
ADDED : நவ 21, 2025 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், இரும்பாலை, கலைஞர் நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 31. கருப்பூரில் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் வைத்துள்ளார்.
கடந்த, 17 மாலை, நிறுவனத்தை பூட்டி வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை வந்தபோது, 'ஷட்டர்' திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, மேசையில் இருந்த, 3,500 ரூபாய், 'லேப்டாப்' திருடுபோனது தெரிந்தது. அவர் புகார்படி, கருப்பூர் போலீசார், நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

