/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆண்டின் கடைசி முகூர்த்தம்: கரபுரநாதர் கோவிலில் 54 ஜோடிக்கு திருமணம்
/
ஆண்டின் கடைசி முகூர்த்தம்: கரபுரநாதர் கோவிலில் 54 ஜோடிக்கு திருமணம்
ஆண்டின் கடைசி முகூர்த்தம்: கரபுரநாதர் கோவிலில் 54 ஜோடிக்கு திருமணம்
ஆண்டின் கடைசி முகூர்த்தம்: கரபுரநாதர் கோவிலில் 54 ஜோடிக்கு திருமணம்
ADDED : டிச 06, 2024 07:19 AM
வீரபாண்டி: சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் சாதாரண முகூர்த்த நாட்களிலும், 10க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் கார்த்திகை வளர்பிறையில் வரும் கடைசி முகூர்த்த தினம் நேற்று. இதற்கு பின் திருக்கார்த்திகை தீபம், அடுத்து மார்கழி முடிந்து, 2025 ஜனவரியில் பொங்கல் பண்டிகைக்கு பின் தான் முகூர்த்த நாட்கள் வருகின்றன. இதனால், 2024ம் ஆண்டின் கடைசி சுப முகூர்த்த தினமான நேற்று, கரபுரநாதர் கோவிலில், கன்னங்குறிச்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சாம்பசிவம் - கலா உள்பட, 54 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. மாற்றுத்திறனாளி ஜோடிக்கு, கோவிலில் திருமணம் செய்ய கட்டணம் கிடையாது. தவிர கோவில் சார்பில் மணமக்களுக்கு பட்டு வேட்டி, புடவையை, கோவில் செயல் அலுவலர் சோழமாதேவி முன்னிலையில் குருக்கள் ரத்தினம் வழங்கினார்.
போக்குவரத்து நெரிசல்
வாழப்பாடி அடுத்த பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் நேற்று, 66 திருமணங்கள் நடந்தன. இதனால் காலை, 7:30 முதல், 10:00 மணி வரை, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக கோவில் அருகே அதிக திருமண மண்டபங்கள் உள்ளதால், அங்கு வந்தவர்கள், வாகனங்களை சாலையோரம் நிறுத்தினர். அதேபோல் கோவிலுக்கு வந்தவர்களும், வாகனங்களை சாலையோரம் நிறுத்தினர். போக்குவரத்தும் வழக்கத்தைவிட அதிகளவில் இருந்தது. இதனால் அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.