/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புகார் பெட்டியில் கடிதம் பள்ளியில் விசாரணை
/
புகார் பெட்டியில் கடிதம் பள்ளியில் விசாரணை
ADDED : ஆக 06, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி, இடைப்பாடி, வெள்ளரிவெள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள புகார் பெட்டியில் கடந்த வாரம், பெயர் குறிப்பிடாமல் ஒரு கடிதம் இருந்தது. அதை, தலைமை ஆசிரியர் செந்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பினார்.
இதையடுத்து நேற்று, சேலம் மாவட்ட குழந்தைகள் உதவி மைய ஆலோசகர் சியோல், பள்ளியில் விசாரித்தார். அப்போது மாணவியர் யாரும் புகார் தெரிவிக்கவில்லை. சமீபத்தில் இடைப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பாலியல் விவகாரத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இதனால் இந்த பள்ளியில் வந்த கடிதத்துக்கு முக்கியத்துவம் அளித்து விசாரணை நடத்தினர்