/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆயுள் காப்பீடு முகவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
ஆயுள் காப்பீடு முகவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 04, 2024 07:01 AM
சேலம்: ஆயுள் காப்பீடு முகவர் சங்கம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்ட அளவில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அதன் துணைத்தலைவர் இளையப்பன் தலைமை வகித்தார். அகில இந்திய நிதி கமிட்டி தலைவர் கலைச்செல்வன் தொடங்கி வைத்தார்.
அதில் பாலிசிதாரர் போனசை உயர்த்தி, அவர்களுக்கான கடன் வட்டியை குறைத்தல்; பாலிசிதாரர் வயதை, 65 ஆக உயர்த்தி, பாலிசி மீதான, ஜி.எஸ்.டி.,யை நீக்குதல்; பழைய கமிஷன் முறையை அமல்படுத்தல்; நேரடி முகவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி, பணிக்கொடையை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தல் உள்பட, 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் பொதுச்செயலர் அமுதன், பொருளாளர் ரமேஷ், துணைத்தலைவர் குழந்தைவேல் உள்பட சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்ட முகவர்கள் பங்கேற்றனர்.