/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மூதாட்டி தோட்ட வீட்டுக்கு 4 ஆண்டுக்கு பின் 'வெளிச்சம்' 'போலீஸ் உங்கள் நண்பன்' நிரூபணம்

ADDED : ஜூலை 06, 2025 01:54 AM
பனமரத்துப்பட்டி, 'போலீஸ் உங்கள் நண்பன்' என கூறுவர். அதை நிரூபிக்கும் விதமாக, போலீசார் எடுத்த நடவடிக்கையால், தனியே வசித்து வந்த மூதாட்டியின் தோட்ட வீட்டுக்கு, 4 ஆண்டுக்கு பின் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
தோட்ட வீடுகளில் தனியே வசிக்கும் முதியோரை கண்காணித்து, பாதுகாப்பு அளிக்க, ஸ்டேஷன் போலீசாருக்கு சேலம் எஸ்.பி., கவுதம் கோயல் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி பனமரத்துப்பட்டி போலீசார், திப்பம்பட்டி ஊராட்சி குள்ளப்பநாயக்கனுாரில், தோட்ட வீட்டில் தனியே வசிக்கும் ஆண்டாள், 70, என்பவரை கண்டறிந்தனர்.அவரிடம் விசாரித்ததில், கணவர் ஓய்வு பெற்ற பி.டி.ஓ., பொன்னு
சாமி இறந்துவிட்டதும், மகள் சென்னையில் வசிப்பதும் தெரிந்தது. மேலும் உறவினர்களுடன் சொத்து பிரச்னையால், 4 ஆண்டாக தார்சு வீட்டிற்கு மின் இணைப்பு பெற முடியாமல் இருட்டில்
தவித்து வந்ததும் தெரிந்தது.
இதனால் ஸ்டேஷன் போலீசார் அறிவுறுத்தல்படி, சோலார் மூலம் கண்காணிப்பு கேமரா பொருத்தினார். பின் பனமரத்துப்பட்டி போலீசார் பாதுகாப்பு கருதி, ஆண்டாள் வீட்டுக்கு மின் இணைப்பு பெற, மின் வாரிய அதிகாரிகளிடம் பேசினர். இதனால் இணைப்பு வழங்க, வாரிய அதிகாரிகள் முன் வந்தனர். நேற்று ஆண்டாள் வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. போலீசாரின் முயற்சியால், 4 ஆண்டுக்கு பின் மின் இணைப்பு கிடைத்தது, மூதாட்டிக்கு
மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.