/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பயிர் மகசூல் அதிகரிக்க மண் பரிசோதனை அவசியம்
/
பயிர் மகசூல் அதிகரிக்க மண் பரிசோதனை அவசியம்
ADDED : ஜூலை 06, 2025 01:54 AM
மேட்டூர், மேச்சேரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் சரஸ்வதி(பொ) அறிக்கை:
பயிர் மகசூல் அதிகரிக்க தேவையான முக்கிய காரணியாக இருப்பது மண். அதில் இருந்து செடிகளுக்கு கிடைக்க கூடிய சத்துகள், அதை கண்டறிய மண் பரிசோதனை அவசியம். பரிசோதனை மூலம் மண்ணில் உள்ள நுண்ணுாட்ட சத்துகள் அளவு, அதன் தரம் தெரிந்து கொள்ள முடியும். தரத்தின்படி மண்ணுக்கு ஏற்ற உரம், அதன் அளவு பரிந்துரைக்கப்படுகிறது. அதன்படி உரமிடுவதால் மகசூல் அதிகரிப்பதோடு, மண்ணின் தரம் பாதுகாக்கப்படுகிறது.
நிலத்துக்கு நிலம் மண்ணின் சத்துகள் மாறுபடும். மண் பரிசோதனை மூலம் மட்டுமே பயிருக்கு தேவையான உரத்தை பரிந்துரை செய்ய முடியும். அதற்கேற்ப உரச்செலவு குறையும். பரிசோதனைக்காக மண் மாதிரி எடுக்கும்போது பயிர் அறுவடை முடிந்த பின், அடுத்த பயிர் சாகுபடிக்கு நிலத்தை தயார் செய்வதற்கு, மண் மாதிரி எடுக்க வேண்டும். மண் மாதிரி
களை ஆய்வு செய்து மண்வள அட்டையை விவசாயி
கள் பெற்றுக்கொள்ளலாம். விபரம் பெற, மேச்சேரி வட்டார வேளாண் விரிவாக்க
மையத்தை அணுகவும்.