/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மல்லுார் மின் அலுவலகம் சொந்த கட்டடத்துக்கு மாற்றம்
/
மல்லுார் மின் அலுவலகம் சொந்த கட்டடத்துக்கு மாற்றம்
மல்லுார் மின் அலுவலகம் சொந்த கட்டடத்துக்கு மாற்றம்
மல்லுார் மின் அலுவலகம் சொந்த கட்டடத்துக்கு மாற்றம்
ADDED : ஆக 06, 2025 01:27 AM
சேலம், மல்லுார் மின்வாரிய அலுவலகம், துணை மின் நிலையம் எதிரே சொந்த கட்டடத்துக்கு இன்று முதல் இடமாற்றம் செய்யப்படுகிறது.இதுகுறித்து, ராசிபுரம் மின்வாரிய செயற்
பொறியாளர் சுந்தர்ராஜன்(பொ) அறிக்கை: சேலம், மல்லுார், திருச்சி பிரதான சாலையில் செயல்பட்டு வந்த மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் ஆக., 6(இன்று) முதல், மல்லுார் துணை மின் நிலையம் எதிரே சொந்த கட்டடத்தில் செயல்படுகிறது.
மல்லுார் மின்வாரிய அலுவலகத்துக்குட்பட்ட கீரனுார், கிழக்குவலசு, மேற்கு வலசு, கரட்டு வலசு, தொட்டிய வலசு, பெரிய பாலம், மலையம்பாளையம், பல்லவநாயக்கன்பட்டி, தொட்டியமந்தை, பிச்சம்பாளையம், குட்டலாடம்பட்டி, எண்: 3 குமாரபாளையம் பகுதி நுகர்வோர், மின்வாரிய பணிகளுக்கு மேற்கண்ட முகவரியில் செயல்படும் மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.