/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி 4.5 பவுன் பறித்தவருக்கு வலை
/
வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி 4.5 பவுன் பறித்தவருக்கு வலை
வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி 4.5 பவுன் பறித்தவருக்கு வலை
வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி 4.5 பவுன் பறித்தவருக்கு வலை
ADDED : ஜன 27, 2025 03:08 AM
மேட்டூர்: மேட்டூர், காவேரி நகரை சேர்ந்தவர் சீதா, 58. இவரது கணவர், 10 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். அருகே உள்ள, வி.பி.கே., நகரை சேர்ந்த, கூலித்தொழிலாளி தினேஷ், 33. இவர், நேற்று முன்தினம் மதியம், 3:30 மணிக்கு சீதா வீட்டுக்கு வந்தார்.
தொடர்ந்து அங்குள்ள சோபாவில் அமர்ந்த தினேஷ், 'என் தாய் பணம் கொடுத்து அனுப்பினார். ஒரு டீ போட்டு தாருங்கள்' என கேட்டார். அவரும் டீ போட்டு கொண்டு வந்தபோது, அவரை சோபாவில் தள்ளிவிட்ட தினேஷ், அவரது தொண்டையில் குத்தி, அவர் அணிந்திருந்த, 4.5 பவுன் சங்கிலியை அறுத்து, பேன்ட் பாக்கெட்டில் போட்டுள்ளார். தொடர்ந்து சீதா அணிந்திருந்த கம்-மலை கழற்றி தரும்படி மிரட்டினார். சீதா கூச்சலிட, தினேஷ், அங்கிருந்து ஓடி தப்பினார். காயம் அடைந்த சீதா, மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேட்டூர் போலீசார், தினே ைஷ தேடுகின்றனர்.