/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.1.75 லட்சம் மதிப்பில் 2 மொபைல் திருடியவர் கைது
/
ரூ.1.75 லட்சம் மதிப்பில் 2 மொபைல் திருடியவர் கைது
ADDED : டிச 18, 2024 01:59 AM
சேலம், டிச. 18-
சேலம், சிவதாபுரம், மொரம்புக்காட்டை சேர்ந்தவர் வினோத், 28. இவர், 1.60 லட்சம் ரூபாய் மதிப்பில், 'ஆப்பிள்' மொபைல் போன் வைத்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு, வீட்டில் சத்தம் கேட்டு வினோத் எழுந்து பார்த்தபோது அவரது ஆப்பிள் போன் மற்றும் 15,000 ரூபாய் மதிப்பில், மற்றொரு மொபைல் போனையும் காணவில்லை. இருப்பினும் அவரது போனில், லொகேஷன் பகிரும் செயலி வைத்திருந்தார்.
அதன்மூலம் சிவதாபுரம் அருகே மெடிக்கல் கடை உள்ள இடத்தை குறிப்பிட்டு, தகவல் வந்தது. நண்பர்களுடன் சென்று பார்த்தபோது, அங்கு மொபைல் போனை வைத்திருந்தவரை பிடித்து விசாரித்தபோது, மொபைல் போன் திருடிச்சென்றவர் என தெரிந்தது. அவர் புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணையில், ஆண்டிப்பட்டி, பனங்காட்டை சேர்ந்த அய்யனார், 20, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், இரு மொபைல் போன்களையும் மீட்டுக்கொடுத்தனர்.