ADDED : அக் 11, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நங்கவள்ளி, நங்கவள்ளி, விருதாசம்பட்டி, மல்லப்பனுார் பிரிவு சாலையில் மளிகை கடை வைத்திருப்பவர் கணேசன், 60. இவரது கடையில், மனைவி பானுமதி இருந்த நிலையில், நேற்று அங்கு வந்த ஒருவர், 3 அரிசி மூட்டைகளை கேட்டார். அவற்றை எடுத்து பைக்கில் வைத்துவிட்டு, மீண்டும் மளிகை பொருட்களை கேட்டுள்ளார்.
அவற்றை, 'பேக்கிங்' செய்யும்போது, அந்த நபர் அரிசி மூட்டையுடன் பணம் கொடுக்காமல் தப்பினார். இதுகுறித்து கணேசன் புகார்படி, நங்கவள்ளி போலீசார் விசாரித்ததில், பென்னாகரத்தை சேர்ந்த சிதம்பரம், 33, என தெரிந்தது. அவரை, நேற்று போலீசார் கைது செய்தனர்.