/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சுவர் கட்டியபோது கிணற்றில் விழுந்தவர் பலி
/
சுவர் கட்டியபோது கிணற்றில் விழுந்தவர் பலி
ADDED : அக் 19, 2025 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயோத்தியாப்பட்டணம்: சேலம், பொன்னம்மா பேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன், 37. இவருக்கு சொந்த-மாக, வாழப்பாடி அடுத்த அனுப்பூர் மேலக்காட்டில், விவசாய தோட்டம் உள்ளது. அங்குள்ள கிணற்றை சுற்றி கருங்கல் வைத்து தடுப்புச்சுவர் கட்டும் பணி மேற்கொள்கிறார்.
அப்பணியில், நேற்று மாலை, 4:30 மணிக்கு, அனுப்பூர் மேலக்காட்டை சேர்ந்த மேஸ்திரி பெரியசாமி, 53, ஈடுபட்டிருந்த நிலையில், தவறி கிணற்றில் விழுந்தார். மக்கள் தகவல்படி, வாழப்பாடி தீய-ணைப்பு துறையினர், 20 நிமிடத்தில் அங்கு வந்து, பெரியசா-மியை சடலமாக மீட்டனர். காரிப்பட்டி போலீசார், உடலை கைப்-பற்றி விசாரிக்கின்றனர்.