தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/மாரத்தான் போட்டி: 350 பேர் பங்கேற்பு

மாரத்தான் போட்டி: 350 பேர் பங்கேற்பு

மாரத்தான் போட்டி: 350 பேர் பங்கேற்பு


UPDATED : நவ 16, 2026 03:52 AM

ADDED : நவ 16, 2026 03:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 03:52 AM ADDED : நவ 16, 2026 03:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்: முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை ஒட்டி, தமிழக விளையாட்டு மேம்பாடு ஆணையம் சார்பில் மாரத்தான் போட்டி, சேலம் காந்தி மைதானத்தில் நேற்று நடந்தது. 200 ஆண்கள், 150 பெண்கள் பங்கேற்றனர். 5, 10 கி.மீ., போட்டி நடத்தப்பட்டது. அதில், 17 முதல், 25 வயதுக்குட்பட்டோர் ஆண்கள் பிரிவில் ஆகாஷ், சிவக்குமார், விஷ்வா பழனிவேல்; பெண்கள் பிரிவில் சத்யா, கீர்த்திகா, சந்தியா ஆகியோர் முறையே, முதல் மூன்று இடங்களை

பிடித்தனர்.

அதேபோல், 25 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் அசோக், முனி-யப்பன், சண்முகம்; பெண்கள் பிரிவில் கவிதா, மணிமேகலை, உமா மகேஸ்வரி ஆகியோர் முறையே, முதல் மூன்று இடங்-களை பிடித்தனர்.

அவர்கள் முறையே, தலா, 5,000, 3,000, 2,000 ரூபாயும், 4 முதல், 10ம் இடம் வரை பிடித்தவர்களுக்கு தலா, 1,000 ரூபாயும், அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஏற்பா-டுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் கண்மணி தேவி, பயிற்சியாளர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us