ADDED : நவ 16, 2026 03:14 AM
சேலம்: சேலம், ஜாரி கொண்டலாம்பட்டி, கல்லாங்காடை சேர்ந்தவர் பார்த்திபன், 20. பெயின்டராக பணி
புரிந்தார். நண்பர் பிரவீன், 21. இவர்கள், யமஹா எப்.எஸ்., பைக்கில் நேற்று புறப்பட்டனர். ஹெல்மெட் அணியாமல் பார்த்-திபன் ஓட்டினார்.
காலை, 8:30 மணிக்கு உத்தமசோழபுரம், பெரியகளத்தில் சென்ற-போது, முன்புறம் சென்ற கார், மறுமுனையில் திரும்ப, சென்டர் மீடியனை ஒட்டி நின்றிருந்தது. பார்த்திபன், கார், சென்டர் மீடியன் இடையே, சாலையை கடக்க முயன்றார். அப்போது கார் மீது மோத, தடுமாறி பைக்கில் இருந்த இருவரும் விழுந்தனர். அந்த நேரத்தில் திருச்செங்கோடில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பஸ், பார்த்திபன் மீது மோத, சம்பவ இடத்தில் உயிரி-ழந்தார். படுகாயமடைந்த பிரவீனை, மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவ
மனைக்கு அனுப்பினர். கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்-கின்றனர்.
