/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
/
மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
ADDED : மே 09, 2024 06:47 AM
பனமரத்துப்பட்டி : பனமரத்துப்பட்டி அருகே ச.ஆ.பெரமனுார் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. காலையில் அம்மனுக்கு அபிேஷகம், சிறப்பு அலங்காரம் செய்தனர். மா விளக்கு ஊர்வலம், பொங்கல் வைத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. மாலையில் தேரோட்டம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியே பக்தர்கள் இழுத்து சென்றனர். தேரில் சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் அருள்பாலித்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் வழிபட்டனர்.
அதேபோல் மல்லுார் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், மா விளக்கு, பொங்கல் வைத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. பெருமாள் கோவிலில் இருந்து பக்தர்கள் அக்னி கரகம் எடுத்து, திருச்சி சாலை வழியே கோவிலை அடைந்தனர்.
தீ மிதித்த பக்தர்கள்
ஓமலுார், கடைவீதி பெரிய மாரியம்மன், சின்னமாரியம்மன், திரவுபதி அம்மன் கோவில்களின் சித்திரை திருவிழாவையொட்டி, நேற்று காலை சக்தி கரகம், பொங்கல் வைத்தல், அர்ச்சுணன் திரவுபதி திருக்கல்யாணம் நடந்தது. இரவு தீ மிதி விழா நடந்தது. 150க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று திரவுபதியம்மன் மஞ்சள் நீர் மெரவனை, பூங்கரகம், அக்னி கரகம், அலகு குத்துதல், நாளை மாரியம்மன் மஞ்சள் நீர் மெரவனை, சத்தாபரண நிகழ்வுடன் விழா நிறைவுபெறுகிறது.பொங்கல் வைபவம்சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் பால்குட ஊர்வலம், அன்னதானம் நடந்தது. நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள், அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர். பலர், பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். மாலையில் அக்னிகரகம், பூங்கரம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை, 8:00 மணிக்கு மாறுவேட நிகழ்ச்சி, மதியம், 12:30 மணிக்கு அன்னதானம், மாலை, 6:00 மணிக்கு கலை நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 11 வரை, திருவிழா நடக்கிறது.