/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
8 பவுன் தாலி திருட்டு திருமண தரகருக்கு வலை
/
8 பவுன் தாலி திருட்டு திருமண தரகருக்கு வலை
ADDED : நவ 30, 2024 02:32 AM
சேலம்: சேலம், அயோத்தியாப்பட்டணம், பி.டி.ஆர்., நகர் நுழைவா-யிலை சேர்ந்த, தொழிலதிபரின் மனைவி சரஸ்வதி, 53. இவ-ருக்கு ஒரு மகன் உள்ளார். பெங்களூருவில் பணிபுரியும் அவ-ருக்கு திருமணம் செய்ய, பெண் பார்த்து வந்தனர்.
இந்நிலையில் தலைவாசல், நத்தக்கரையை சேர்ந்த திருமண தரகர் சுப்ரமணி, அழகாபுரத்தை சேர்ந்த செந்தில் என்பவரிடம், பெண்களின் போட்டோக்களை கொடுக்கும்படி அனுப்பியுள்ளார்.இதனால் கடந்த, 18ல், செந்தில், சரஸ்வதி வீட்டுக்கு வந்-துள்ளார். சமையல் அறைக்கு சென்று டீ போட்டு எடுத்து வந்து கொடுத்தார். பின் போட்டோவை வாங்கிக்கொண்டார். செந்தில் சென்ற பின், 22ல் பீரோவை திறந்து பார்த்த போது, 8 பவுன் தங்க தாலிக்கொடியை காணவில்லை. சரஸ்வதி புகார்படி, அம்-மாபேட்டை போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேம-ராவை ஆய்வு செய்ததில், செந்தில் மட்டும் வீட்டுக்கு வந்து சென்றது தெரிந்தது. இதனால் அவர் மீது வழக்குப்பதிந்த போலீசார், அவரை தேடி வருகின்றனர்.